மே 1ம் தேதி முக்கியம்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1 அன்று
தொழிலாளர் தினத்தையொட்டி நடத்தப்படும் கிராமசபை கூட்டத்தில் எடுக்கப்பட உள்ள
தீர்மானங்கள் குறித்தும், கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் அனைவருக்கும் தடுப்பூசி
செலுத்துவது குறித்தும், கிராமங்களில் நெகிழி இல்லா நிலையை உருவாக்குவது குறித்தும்
கிராம பஞ்சாயத்து தலைவர். துணைத்தலைவர் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்களுடனான
கலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் இஆபூ.
அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் கே.பி.ஜே திருமண மண்டபத்தில் திமிரி
ஊராட்சி ஒன்றியம் பகுதிகளிலுள்ள 28 ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தையொட்டி
நடத்தப்படும் கிராமசபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள தீர்மானங்கள் குறித்தும்,
கிராமப்புறங்களில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும்
பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும், கிராமப்புறங்களில் நெகிழி இல்லாத நிலையை
அடைய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஊராட்சி மன்றத் தலைவர்கள்,
துணைத் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட
ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில்
நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு திட்ட இயக்குநர் ஊரக
திருமதி.ஜி.லோகநாயகி, அவர்கள் முன்னிலை வகித்தார்கள்
வளர்ச்சி முகமை
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது
01.05.2022 அன்று தொழிலாளர் தினத்தையொட்டி மாவட்டத்திலுள்ள 288
ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்திட வேண்டும். இந்த கிராம
சபை கூட்டத்தில் பொதுமக்களின் முன்னிலையில் கிராமங்களில் ஏற்கனவே
நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்க வேண்டும். காலை 10
மணிக்கு கூட்டம் தொடங்கப்பட வேண்டும். இக்கூட்டம் எந்த ஒரு தனி நபர் இடத்திலும்
நடத்திடக் கூடாது. ஊர் பொது இடத்தில் மட்டுமே நடத்திட வேண்டும். மத வழிபாட்டு
தளங்களில் நடத்தக் கூடாது. கூட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட கிராம மக்கள் அதிக
அளவில் இருக்க வேண்டும். குழந்தைகள் போன்றவர்களை அதிக அளவில் வைத்து
நடத்தக் கூடாது. அதிகளவில் பொதுமக்களை சேர்த்து கிராம சபையில் வாசிக்கும்
தீர்மானங்கள் மீது கையெழுத்திட வேண்டும். கூட்டமில்லாமல் தீர்மானங்கள் நிறைவேற்றக்
கூடாது. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், குடிநீர் வசதி,
மின்சார வசதி இதர நிர்வாக பணிகளுக்கான செலவினங்கள் குறித்தும், ஊராட்சி பகுதியில்
நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அனைத்து கிராம
அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,
ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், தூய்மை பாரத
இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், பற்றி விவாதிக்க வேண்டும் என்று பேசினார்.
Comments
Post a Comment