விசாரணை

10 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற
மாணவருக்கு மீண்டும் ஹால்டிக்கெட்

குடியாத்தம் அருகே, வளத்துாரை சேர்ந்தவர் கணேசன். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்தார். கொரோனா தொற்று பரவியதால், கடந்தாண்டு 10 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
இதனால் கணேசனுக்கு தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த கல்வியாண்டில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத மாணவர் கணேசனுக்கு மீண்டும் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
வேலுார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசாமி உத்தரவுபடி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்