செளந்தர்ய லஹரி

*****சௌந்தர்ய லஹரி*****

செவ்வாய்,வெள்ளி கிழமைகளில் செளந்தர்ய லஹரி சொல்லி தேவியின்  அருளை பெறலாம்.*

ஆதிசங்கரர் விஜய யாத்திரை செய்துகொண்டு வரும்பொழுது,  கயிலாயத்திற்கு  சென்றார்.
கயிலாயத்தில் அவர் மெளனமான நிலையில் தியானம் செய்து கொண்டிருந்த சமயம் ,பார்வதி ,பரமேஸ்வரர் இருவரும்  தங்களுக்குள்," கீழே பூலோகத்திலிருந்து நமது கயிலாயத்திற்கு  ஒரு குழந்தை வந்திருக்கிறது".இந்த இளம்வயது பாலகனைப் பார்த்தால் ஏதாவது நாம் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது "என்று பேசிக் கொண்டார்கள்.இவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்தது ஆதி சங்கரருக்கு தெரியாது.

திடீரென்று இரண்டு சுவடிகளைப் பார்வதி பரமேஸ்வரர் இருவரும் மேலே இருந்து ஆதி சங்கரரிடம் தூக்கி எறிந்தனர்.அவரது இரு கைகளிலும் சுவடிகள் பட்டன.ஆனால் ஒன்றைத்தான் அவர் பிடித்தார்.மற்றொன்றை நந்தி பகவான் கயிலாயத்திலிருந்து பறி போகிறதே!  என்று  பிடுங்கி விட்டார்.நந்தியின் ஸ்பரிசம் பட்டதும் சங்கரர் கண்ணைத் திறந்து பார்த்தார்.கையில் ஒரு சுவடிதான் இருந்தது.இன்னொன்றைக் காணவில்லை.சங்கரர் மனம் நொந்து அழுது  மேலே பார்த்த போது,அங்கு பார்வதி,பரமேஸ்வரர்  தரிசனம்  கிடைக்க பெற்றார்.  

அம்பாளை நோக்கி "அம்மா" இது என்ன லீலை? ஒரு சுவடி மட்டுமே எனக்கு கிடைத்தது.இன்னொன்றை நந்தி எடுத்து கொண்டு விட்டார்.எனக்கு கிடைத்த பொக்கிஷத்தை தவற விட்டு விட்டேனே! என்று அழுது புலம்பினார்.

அச்சமயம் அம்பாள் "சங்கரா! நீ அழாதே!.என்னைப் பார்த்து தரிசனம் செய்து சிரம் முதல் பாதம் வரை நீ எழுது.நான் உனக்கு எல்லா இடங்களிலும் காட்சி கொடுப்பேன்.அதனால் கவலையின்றி கிடைத்தை வைத்துக் கொள் "என்றாள். 

முதல் 41ஸ்லோகம் சங்கரிடம் இருந்தது மீதி 59 ஸ்லோகத்தை நந்தி வைத்திருந்தார்.  

அன்னையின் ஆணைப்படி மடை திறந்த வெள்ளம்போல் தாமே 59 ஸ்லோகத்தையும் சங்கரர் அன்னையின் அருளால் பாடி முடித்தார்.இவ்வாறு 100 பாடல்கள் கொண்ட தொகுப்பே செளந்தர்ய லஹரி ஆகும்.இதுவே செளந்தர்ய லஹரி பிறந்த கதை.

முதல் 41ஸ்லோகம் ஆனந்த லஹரி என்று கூறப்படுகிறது.இதை ஈசனே இயற்றி அன்னையை ஆனந்தத்தில்  

செளந்தர்யம் என்றால் அழகு,100 பாடல்களிலும் அன்னையின் அழகும்,அருளும்  அற்புதமாக தாண்டவமாடுகின்றன. 

செளந்தர்ய லஹரி 99வது ஸ்லோகப்படி,இதனை பாராயணம் செய்பவர்களுக்கு பார்வதிதேவியின் எல்லையில்லாத்  அருளோடு,சரஸ்வதி கடாக்ஷமும் கிட்டும் என்பதை அறியலாம்.

*செவ்வாய்,வெள்ளி கிழமைகளில் செளந்தர்ய லஹரி சொல்லி தேவியின்  அருளை பெறலாம்.*

 அம்பிகையை ஆராதித்து சகல செளபாக்கியம் அடைய, நாம் பாராயணம் செய்வதுதான் செளந்தர்ய லஹரி.

****ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்***

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்