புகார்
தலைமை ஆசிரியை மீது
பெற்றோர் புகார்
குடியாத்தம் நெல்லுார்பேட்டையில் அரசு மகளிர் பள்ளி உள்ளது. இங்கு கழிவறை போன்ற வசதிகள் செய்து தரக்கோரி பெற்றோர் பள்ளிக்கு அடிக்கடி வந்து முறையிட்டனர்.
பள்ளி தலைமை ஆசிரியை பணி செய்ய விடாமல் பெற்றோர் தடுப்பதாக குடியாத்தம் போலீசில் புகார் செய்தார். போலீசார் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், வேலுார் மாவட்ட கல்வி அலுவலரிடம் சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது புகார் செய்தனர்.
தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரை வாபஸ் பெறாவிட்டால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என குறிப்பிட்டிருந்தனர்.
ஒரு வாரத்தில் விசாரணை நடத்துவதாக கல்வித்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.
Comments
Post a Comment