பள்ளிக்கு பொருள்கள் வழங்கும் விழா

*நெமிலி ஊராட்சி ஒன்றியம்!*
*பரமேஸ்வரமங்கலம் கிராமம்!!*

*அரசினர் உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.70,000/- மதிப்புள்ள 20 மின்விசிறிகள் (Fan) மற்றும் 2 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை (RO water Purifier) நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்கள் வழங்கினார் !!!*

கடந்த இரு வாரங்களுக்கு முன் பரமேஸ்வரமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஆய்வு மேற்கொள்ள, நெமிலி ஒன்றிய *பெருந்தலைவர் பெ.வடிவேலு* அவர்களுக்கு, பள்ளியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று *பெருந்தலைவர் வடிவேலு* அவர்கள் பள்ளிக்கு சென்றார். அப்போது பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து தலைமை ஆசிரியரோடு கலந்தாலோசித்தார். அப்போது *உயர் நிலைப்பள்ளியை மேனிலைப்பள்ளியாக* தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். அதோடு மாணவர்கள் இந்த கோடை காலத்தில் காற்று வசதி குறைவாக உள்ளதால் வெப்பத்தால் தவித்து வருகின்றனர். எனவே 20 Fan மற்றும் சுத்தமான குடிநீர் வழங்க, 2 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் (RO water Purifier) பள்ளிக்கு வாங்கி தருமாறு கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து இன்று பள்ளிக்கு சென்று *ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்கள்  ரூ.70,000/-* மதிப்புள்ள 20 Fan மற்றும் 2 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் (RO water Purifier) பள்ளி தலையசிரியரிடம் வழங்கினார். இதனை பெற்றுக்கொண்டு *ஆசிரிய பெருமக்களும், மாணவர்களும், பொதுமக்களும் ஒன்றிய பெருந்தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.*

இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரவி, சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பவானி வடிவேலு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அப்துல் ரஹ்மான், ஒப்பந்ததாரர் சங்கர், ஆசிரியர் சண்முகம், கிளைக்கழக செயலாளர்கள் வெங்கடேசன், சதீஷ்குமார், மற்றும் மோகனவேல், சுரேஷ், சூர்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்