போலீஸ் சஸ்பெண்ட்
ஓட்டலில் தகராறு
போலீஸ்காரர் சஸ்பெண்ட்
வேலுார் மூஞ்சூர்பட்டை சேர்ந்தவர் குமரேசன். இவர் ஆற்காடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 25 ம் தேதி இரவு 10:00 மணிக்கு, வேலுார் அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் குடி போதையில் சென்ற இவர் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் அங்கிருந்தவர்களை தாக்கி தகராறு செய்துள்ளார்.
புகார்படி வேலுார் தெற்கு போலீசார் குமரேசன் மீது வழக்கு பதிவு செய்தனர். குமரேசனை சஸ்பெண்ட் செய்து ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி., தீபா சத்யன் உத்தரவிட்டார்.
Comments
Post a Comment