ஆலோசனை
தொழிற் கல்வி ஆசிரியர்கள் ஆலோசனை
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் கழகம் சார்பில் குடியாத்தத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாநில தலைவர் ஜனார்த்தனன் பேசியதாவது:
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, நல்வழிப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக முதல்வர் வகுக்க வேண்டும்.
பல இடங்களில் ஆசிரியர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாக நடந்து கொண்டுள்ளது. மருத்துவ பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்ததை போல ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்.
மாணவர்களை கண்டிக்கும் அதிகாரம் ஆசிரியர்களுக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும். பள்ளிகளில் நீதி போதனை வகுப்புக்கள், நல்வழிக்கல்வி வகுப்புக்கள் நடத்தப்பட வேண்டும். கல்வி இணைச் செயல்பாடுகளில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிர்வாகிகள் மகாலிங்கம், கலைச்செல்வன், பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment