ஆணை வழங்கும் நிகழ்ச்சி

*அரசு பொதுத்தேர்வு முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், பறக்கும்படை* *உறுப்பினர்களுக்கான ஆயத்த கூட்டம்*
*பணி நியமண ஆணைகள் வழங்கி மெட்ரிக் பள்ளி இயக்குநர் அ.கருப்பசாமி பேசினார்*
***   ***   ***.
மே 5-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு பணிகளுக்கான பணி ஆணைகளை மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் அ. கருப்பசாமி வழங்கி பேசினார்.
அனைத்து தலைமை ஆசிரியர்கள் (முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்கள்) ஆயத்த கூட்டம்  வேலூர் லஷ்மிகார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இயக்குநர் அ.கருப்பசாமி அவர்களின் தலைமை நடைபெற்றது.  
வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி வரவேற்று பேசினார்.  மாவட்டக்கல்வி அலுவலர் த.சம்பத்து, வேலூர் மண்டல அரசுத்தேர்வுகள் துறையின் உதவி இயக்குநர் தாயம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.  
மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்கள் பேசும் போது கூறியதாவது.. முதன்மைக்கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் முன்னதாக சென்று உரிய வசதிகள் உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.  தேர்வு பணிகளில் உரிய மற்றும் முக்கிய கவனம் செலுத்தி எவ்வித குறைபாடுகளும் ஏற்படா வண்ணம் செயலாற்ற வேண்டும்.  தேர்வு நடைபெறும் நாட்களில் சரியான நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையங்களுக்கு சென்று பதட்டமின்றி தேர்வு பணிகளில் ஈடுபடவேண்டும்.  எவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு செயலாற்றி தேர்வுகளை சிறப்பாக நடத்திட வேண்டும் என்றார்.  பிற்கலில் பறக்கும்படை உறுப்பினர்களுக்கான ஆயத்த கூட்டத்தில் பேசினார்.  வேலூர் மாவட்டத்தில் உள்ள வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களையும் இயக்குநர் அவர்கள் பார்வையிட்டார்கள்.
பள்ளித்துணை ஆய்வாளர் ஆ.மணிவாசகம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் எம்.மகாலிங்கம், தலைமையாசிரியர்கள், முதுகலைஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முடிவில் பறக்கும்படை உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் நன்றி கூறினார்.
படவிளக்கம்.  மே-5 ஆம் தேதிமுதல் நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வு பணிகளில் முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை மெட்ரிக் பள்ளி இயக்குநர் அ.கருப்பசாமி வழங்கியபோது எடுத்தப்படம் உடன் மாவட்ட முதன்மைக்கல்வி அலவலர் க.முனுசாமி, தேர்வுகள் துறை உதவி இயக்குநர் தாயம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்