போலீசுக்கு குழந்தை சல்யூட்

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் போலீஸ் நிற்பதை கண்டு இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை பயந்து நின்றார்.

உதவி ஆய்வாளரின் தொப்பி அணிந்து தைரியமாக சுற்றி வந்தார் மகன்.

குழந்தையின் ஆசை நிறைவேற்றினார் காவல் உதவி ஆய்வாளர். 

வாணியம்பாடி எப் 29 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் நகர காவல் உதவி ஆய்வாளர் ராஜா தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக முஜக்கீர் என்பவர் ரம்ஜான் 27வது இரவு சிறப்பு தொழுகை முடித்து விட்டு தன்னுடைய 4 வயது மகன் முபஷ்ஷீர் உடன் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருப்பது கண்டு அவர் சாலை ஓரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பயந்து நின்றார்.

அப்போது அவரது 4 வயது மகன் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி காவல் உதவி ஆய்வாளர் ராஜாயிடம் சென்று அங்கிள் நான் உங்கள் தொப்பி அணிந்து பைக் ஓட்டணும் இன்று ஆசை தெரிவித்தார். இதனை தொடர்ந்து குழந்தையின் ஆசை நிறைவேற்றும் வகையில் உதவி ஆய்வாளர் ராஜா தன்னுடைய இருசக்கர வாகனத்தில் குழந்தையை உட்காரவைத்து தான் அணிந்திருந்த தொப்பியை குழந்தைக்கு அணிவித்து பேருந்து நிலையம் வரை அழைத்து சென்று மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து இறக்கி விட்டார்.

குழந்தையின் ஆசை நிறைவேற்றிய காவல் உதவி ஆய்வாளர் ராஜாவுக்கு பொதுமக்கள் பாராட்டினர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்