வெயிலுக்கு பெண் பலி
வெயிலுக்கு பெண்
பலி
ராணிப்பேட்டை , நவல்பூரை சேர்ந்தவர் மணி, 65. விவசாயி. இவர் மனைவி சந்தியா, 55. இவர் நேற்று பிற்பகல் 11:00 மணிக்கு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார்.
சிகிச்சை முடிந்து மதியம் 3:00 மணிக்கு வெளியே வந்த அவர் கடும் வெயிலில் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்றார்.
அப்போது அவர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். வாலாஜாபேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், கடும் வெயிலின் தாக்கத்தில் அவர் இறந்தது தெரியவந்தது.
Comments
Post a Comment