விசாரணை




வேறோருவர் வங்கி கணக்கில்
தவறுதலாக போடப்பட்ட  பணம்
குறித்து விசாரணை

நாட்றம்பள்ளி அடுத்த கவுக்காபட்டியை சேர்ந்தவர் கல்யாணி, 53. இவர் சிக்கணாங்குப்பம் ஊராட்சியில் 100 நாள் திட்டத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 10 மாதமாக கூலிப்பணம் வரவில்லை. நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் செய்தும் கண்டுகொள்ளவில்லை.
ஊராட்சி தணிக்கை  குழுவினர்  நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும் 100 நாள் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
அதில், கல்யாணி வேலை செய்ததற்கு வழங்க வேண்டிய கூலிப்பணம் 18,791 அவரது கணக்கில் செலுத்தாமல், கற்பகம் என்பவர் வங்கி கணக்கில் செலுத்தி வந்தது தெரியவந்தது.
கற்பகத்திடமிருந்து பணத்தை மீட்டு கல்யாணிக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இங்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தவர்களுக்கு கூலி சரியாக வழங்கப்பட்டதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்