22 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது மக்கள் கட்சி
பாசமிகு நமது மக்கள் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு
வணக்கம்.
31-05-2001 அன்று இந்திய தேர்தல் ஆணையம் புதுடெல்லியில் பதிவு செய்யப்பட்ட நமது மக்கள் கட்சி 21 ஆண்டுகள் கடந்து 22வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
சமூக நீதி சமத்துவம் சகோதரத்துவத்தை பேணிக்காக்க அயராது உழைத்து வருகின்ற நமது மக்கள் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் நமது மக்கள் கட்சியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கல்வி பொருளாதாரம் அரசியல் ஆகியவற்றில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள நமது மக்கள் அனைவரும் வளர்ச்சி அடையும் காலம் வரை நாம் ஒற்றுமையாக உழைத்து மக்களுக்கு சேவைகள் செய்திட வேண்டும்.அரசியல் அதிகாரம் பெற அயராது உழைக்க வேண்டும்.
நமது மக்கள் கட்சியின் கொள்கைகளை கிராமங்கள் தோறும் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.நமது மக்கள் கட்சியை அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில் மக்கள் மனதில் பதிய வைத்து நமது லட்சியத்தை அடைய பாடுபடவேண்டும் என்று அனைவரையும் இந்நன்னாளில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நமது மக்கள் கட்சியின் கிளைகளை கிராமங்கள் தோறும் உருவாக்கி கட்சியின் வளர்ச்சிக்கு உதவும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பாசமுடன்,
மு.ராஜமாணிக்கம், நிறுவனர்- தலைவர், நமது மக்கள் கட்சி.
Comments
Post a Comment