30 பேருக்கு மெமோ
மக்கள் குறை தீர்க்கும்
கூட்டத்திற்கு வராத 30
அதிகாரிகளுக்கு மெமோ
திருப்பத்துார் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கடந்த 30 ம் தேதி நடந்தது. இதில் பொது மக்களிடமிருந்து 290 மனுக்கள் பெறப்பட்டது.
மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதிகாரிகளை அழைத்த போது பலர் வரவில்லை. குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்காத பல்வேறு துறைகளை சேர்ந்த 30 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு கலெக்டர் அமர்குஷ்வாஹா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதற்கு சரியான விளக்கத்தை அளிக்காவிட்டால், பணியிட மாற்றம், சஸ்பெண்ட் போன்ற நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதால், 30 அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
Comments
Post a Comment