97 லட்சம் ரூபாய் மோசடி கூட்டுறவு பெண் வங்கி அதிகாரி கைது

ரூ 97 லட்சம் மோசடி செய்த
கூட்டுறவு பெண் வங்கி மேலாளர்
கைது

வேலுார் அரியூரை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி, 38. இவர் வேலுார் மத்திய கூட்டுறவு வங்கி வேலுார் கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
2018– 19ம் ஆண்டுகளில் குடியாத்தம் கிளையில் மேலாளராக இவர் பணியாற்றிய போது,    மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கியதாக  போலி ஆவணங்கள் தயாரித்து 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது வங்கி தணிக்கையில் தெரியவந்தது.
கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி கொடுத்த புகாரின் பேரில், வேலுார் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனால் உமா மகேஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், உமா மகேஸ்வரி போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததும், மோசடி செய்த பணத்தில் சென்னை, வேலுார், காட்பாடியில் வீடு, வீட்டு மனை வாங்கியதும் உறுதியானது.
வணிக குற்றப்பிரிவு போலீசார் உமா மகேஸ்வரியை  கைது செய்து வேலுார் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்