பள்ளி முற்றுகை
மொபைல் போனை தராததால்
பள்ளி
முற்றுகை
குடியாத்தத்தில் தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் மொபைல் போனை எடுத்து வர பள்ளி நிர்வாகம் கடந்த மாதம் தடை விதித்தது. மொபைல் போனை மாணவர்கள் எடுத்து வந்ததால் 90 போன்களை பள்ளி ஆசிரியர்கள் பறிமுதல்
செய்தனர்.
மொபைல் போன்களை திருப்பி தரும்படி மாணவர்களின் பெற்றோர்கள் கேட்டுள்ளனர். பள்ளி நிர்வாகம் தரவில்லை. இதை கண்டித்து பெற்றோர் இன்று காலை 8:00 மணிக்கு பள்ளியை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்கு வாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு நடந்தது.
மாணவர்கள் இனிமேல் பள்ளிக்கு மொபைல் போன்கள் எடுத்து வரக்கூடாது என உறுதி அளித்ததன் பேரில், மொபைல் போன்கள் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகத்தினர் வழங்கினர்.
Comments
Post a Comment