பணம்தான் வாழ்க்கையா?
🌹மலரும் நினைவுகள்🌹
💐💐🙏🏻🌹🌹💐இன்றைய சிந்தனை..
................................
‘’பணம் தான் வாழ்க்கையா’’?
………………………………
வாழ்வதற்குப் பணம் தேவை தான், ஆனால் பணமே வாழ்க்கையாகி விடக் கூடாது. இந்த உண்மையை உணரும் ஒருவர் திருப்தியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வார்.
“பண ஆசை எல்லாவிதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக் கொண்டு பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக் கொண்டு இருக்கிறார்கள்”
இருப்பதை வைத்து திருப்தியோடு வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு பணப்பற்றாக்குறை இருக்காது என்று சொல்ல முடியாது.
ஆனால், அவர்கள் பணத்தைப் பற்றிய கவலையிலேயே மூழ்கி விட மாட்டார்கள்.
உதாரணத்துக்கு, அவர்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டால் அதைப் பற்றி அதிகமாகக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்க மாட்டார்கள்.
பணப் பிரச்சினையினால் தான் நிறையப் பேர் விவாகரத்து செய்து கொள்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
பணப் பிரச்சினையால் சிலர் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். சிலருக்குத் தங்கள் துணையை விட, ஏன் தங்கள் உயிரை விட பணம் தான் முக்கியமாக இருக்கிறது.
ஆனால், பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் அதையே முழுமையாக நம்பி இருக்க மாட்டார்கள். “
ஒருவனுக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்தாலும் அது அவனுக்கு நிம்மதியான வாழ்வைத் தராது”
ஆம்.,நண்பர்களே..,
பணத்தையும், சொத்து சுகத்தையும் பெரிதாக நினைக்கிற ஆட்களோடு பழகாதீர்கள்.
பணத்தை விட நல்ல குணங்களைப் பெரிதாக மதிக்கும் நபர்களோடு பழகுங்கள்.
பண ஆசை உங்களுக்குள் வேர் விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் நண்பர்களை விட,, குடும்பத்தை விட,, உங்களை விட ,பணம் முக்கியம் இல்லை. பணம் தேவை தான், ஆனால் பணமே வாழ்க்கையாகி விடாது.
( உடுமலை சு.தண்டபாணி)...🌹💐🙏🏻💐🌹
Comments
Post a Comment