செய்தி துளிகள்
*தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகளின் உயிருக்கே உத்தரவாதமில்லாத அவல நிலை உருவாகியுள்ளது*
*தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கண்டனம்*
*திமுக ஆட்சியில் ஒழுக்கமின்மை மேலோங்கி நிற்கிறது - ஓபிஎஸ்*
*திருப்பூர், வெள்ளக்கோவில் பகுதியில் திட்ட அலுவலர் ராஜ ராஜேஸ்வரியை அரிவாளால் வெட்டிய இளநிலை உதவியாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்*
*மாநில வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் சட்ட ஒழுங்கினை பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்*
*ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன*
*திமுக ஆட்சியில் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் தங்கம் தென்னரசு*
*சென்னை, கோயம்பேட்டில் செல்போன் கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ₨1 லட்சம் பணம், 6 செல்போன்கள் கொள்ளை*
*"கெடு ஓவர்"..! - தலைமைச் செயலகம் நோக்கி பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் பேரணி*
*திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாம்பு கடிக்கு கடந்த 2 நாட்களில் 5 பேர் பலியான பரிதாபம்*
*பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ₨17.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு*
*"திமுக ஆட்சி அமைய முக்கிய காரணம் உதயநிதி" - "அவர் அமைச்சராக வேண்டும்" - அமைச்சர் மூர்த்தி*
*மக்கள் நலப் பணியாளர்களை ₨7,500 மாத ஊதியத்துடன் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களாக பணியமர்த்தும் முன்மொழிவை அமல்படுத்த தடை கோரி மனு*
*மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல்*
*இடையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிய முறையீட்டை ஏற்றது உச்ச நீதிமன்றம்*
*அரசு முன்மொழிந்த ஊதியம், மக்கள் நலப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு ஊதியத்தை விட குறைவு -
சென்னை மாங்காடு அருகே கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சேலத்தில் மீட்பு*
*கடத்தலில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தது காவல்துறை*
சென்னை, வண்டலூர் அருகே உள்ள தனியார் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி*
*3,000 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 74 பேருக்கு தொற்று உறுதி*
*தொற்று பாதிக்கப்பட்ட 74 மாணவர்களும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்*
Comments
Post a Comment