பலம்
*"வார்த்தைகளின் பலம்."*
*நேர்மறை ( positive) எண்ணங்களின் வலிமையைக் கொண்டு நாம் ஆக்கபூர்வமான செயல்களைச் செய்ய முடியும், அழிவுக்கு வகை செய்யும் செயலையும் செய்ய முடியும்.*...!!!!!!
*நாம் வாழ்வதற்கும், வீழ்வதற்கும் நமது எண்ணங்களே காரணமாகின்றன.*...
*வாழ்க்கை எப்போதும் நாம் நினைப்பது போல இருந்தது இல்லை...*!!!!!
*எதிர்மறை ( negative) எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக் கூட்டும் திரைப்படம் போல ஓடிக் கொண்டு இருக்கும்.*......
*அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்குத் தோன்றும். அவை நமக்கு கொடுப்பது வலியும் வேதனையும் தான்.*....!!!
*எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி என்பது தெரிந்தும், அதை ஓழிக்கும் வழி தெரியாமல் பலரும் திண்டாடுகிறோம்.*...!!
*அந்த நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டால், வாழ்வில் நமக்கு தோல்வி என்பதே கிடையாது.*....!!!!!!
*ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் தன் அறையில் தனியாக சோகமாக அமர்ந்து கொண்டு தன் துயரங்களை எழுதிக் கொண்டிருந்தார்:*....!!!
*சென்ற வருடம் எனக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை,கணையத்தில் கல் எடுக்க வேண்டிய சூழ்நிலை...*
*நீண்ட நாள் படுக்கையிலேயே இருக்க வேண்டி இருந்தது. அதே வருடம் 60 வயது ஆகி விட்டதால் வேலையிலிருந்து ஒய்வு..*......!!!!!!!
*அதே வருடம் என் அன்பிற்குரிய தந்தை காலமானார்*................
அதே வருடம் என் மகன் ஒரு கார் விபத்தில் மாட்டிக் கொண்டு மருத்துவ தேர்வு எழுத முடியவில்லை. காரும் பயங்கர சேதாரம்.என்ன ஒரு மோசமான வருடம், என்று வருத்தத்துடன் எழுதி முடித்தார்.*....!!!!!!
*அவருடைய மனைவி அப்போது தான் உள்ளே வந்தார். கணவர் சோகமாக அமர்ந்து இருப்பதைப் பார்த்து பின்னால் இருந்து அவர் எழுதியதைப் படித்தார்.*.......!!!!!
*பின் மெதுவாக வெளியே போய் இன்னொரு பேப்பரில் எதையோ எழுதிக், கொண்டு வந்து, கணவர் எழுதிய பேப்பருக்கு அருகில் வைத்தார்.*.....
*சென்ற வருடம் நீண்ட நாட்களாக இருந்த வலியில் இருந்து விடுதலை பெற்றேன்.*!!!!!!
*60 வயது ஆனதால் வேலையிலிருந்து ஒய்வு பெற்றதால், என் பொழுதை அமைதியாகவும், படிப்பதிலும், எழுதுவதிலும் செலவிடுகிறேன்..*!!!!!
*என் அப்பா 95 வயதில் யாருக்கும் இனியும் பாரம் வேண்டாம் என்று அமைதியாக இயற்கை எய்தினார்.*!!!!!
*அதே வருடம் என் மகன் விபத்தில் மீண்டு புது வாழ்வு கிடைத்தது.*......!!!!!!
*என்னுடைய கார் சேதாரமானாலும் என் மகன் எந்த குறைபாடும் இல்லாமல் மீண்டு வந்தான்.*...!!!!!
*இந்த வருடம் எனக்கு நல்ல வருடம். அவர் மனைவி எழுதியதைப் படித்த கணவர் நன்றிப் பெருக்கால் தன் மனைவியை அணைத்துக் கொண்டார்.*....!!!!!!
*என்ன அற்புதமான மனதிற்கு வலுவூட்டும் வாக்கியங்கள்...*!!!!!!
*ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும், மகிழ்ச்சிகரமான கணங்களாக மாற்றிக் கொள்வது நமது கையில் தான் உள்ளது.*....!!!!!
*நேர்மறையான வார்த்தைகளை உபயோகிக்கப் பழகிக் கொள்ளுங்கள்.*.....
*வாழ்க்கையை ஆனந்தமாக வாழலாம்.*....!!!!!
*நாம் நமது எண்ணங்களை முறைப்படுத்துவோம்.,.. அதன் மூலம் நமது வாழ்க்கையை வளப்படுத்துவோம்*..
என்றும் உங்கள் நலனில்
*🍃Sri Yoga & Naturopathy*🍃
*யோகா இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 9952133415*
Comments
Post a Comment