தற்கொலை
தற்கொலை ஒரு தீர்வல்ல
காட்பாடி அருகே தந்தை, மகள்
துாக்கிட்டு தற்கொலை
வேலுார் காட்பாடி டி.கே. புரத்தை சேர்ந்தவர் தினகரன், 52. இவர் காட்பாடி காந்திநகர் மின்வாரிய அலுவலகத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்தார். இவர் மனைவி சிவகுமாரி, 45, உடல் நலக்குறைவால் கடந்தாண்டு இறந்து விட்டார்.
இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் 16 வயதுள்ளவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பும், இரண்டாவது மகள் 14 வயதுள்ளவர் ஒன்பதாம் வகுப்பும் படிக்கின்றனர்.
மனைவி இறந்ததால் மனவேதனையில் இருந்த தினகரன் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டார். இதை அவரது மகள்களிடம் கூறியதற்கு, நீங்கள் இல்லாவிட்டால் நாங்களும் அனாதைகளாகிவிடுவோம் என்று கூறி மூவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்து விட்டு, நேற்று நள்ளிரவு 12:00 மணிக்கு வீட்டில், தினகரன், இரண்டு மகள்கள் பேன் கொக்கியில் துாக்கிட்டு தொங்கினர்.
இதில் பாரம் தாங்காமல் 16 வயது மகள் கீழே விழுந்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார்.
அவர்கள் வருவதற்குள் தினகரன், இரண்டாவது மகள் பிருந்தா துாக்கில் பிணமாக தொங்கினர். விருதம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
Comments
Post a Comment