தலைவருக்கு அபராதம்
ஊராட்சி மன்ற தலைவருக்கு
ரூ 18 ஆயிரம் அபராதம்
ஆற்காடு அடுத்த மோசூரை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவரது நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க மின் இணைப்புக்கு அனுமதி வாங்கியிருந்தார்.
அனுமதி பெற்ற இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்காமல், வேறு இடத்தில் அமைத்து மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளார்.
வேலுார் மின்வாரிய பறக்கும் படை அதிகாரி கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ததில், முறைகேடாக இவர் மின்சாரத்தை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
திமிரி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சாந்திபூஷன், ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரனுக்கு 18 ஆயிரத்து 633 ரூபாய் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டார்.
அபராதத்தை செலுத்தாவிட்டால் ஒரு ஆண்டு சிறை தண்டனை என்பதால், மகேந்திரன் அபராதத் தொகையை செலுத்தி விட்டார்.
Comments
Post a Comment