ஆர்பாட்டம் ஏன்?
அனைவருக்கும் வணக்கம்
வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக *பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் PM கிசான் சம்மன் காணொலி காட்சியின் அவமதிப்பு செய்த* மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து *கண்டன ஆர்பாட்டம்*
01.06.2022 புதன்கிழமை காலை11.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகில் நடைப்பெறுகிறது
அனைத்து மாவட்ட, மண்டல், அணி, பிரிவு நிர்வாகிகள் மற்றும் அனைத்து தாமரை சொந்தங்களும் வரவேண்டும்
மண்டல் தலைவர்கள் மண்டலுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் தகவல் தந்து அழைத்துவரவும்
ஆர்பாட்டம் ஏன்?
பிரதமர் பேச்சை
புறக்கணித்த
அதிகாரிகள்
வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகம், 5வது மாடியில் இன்று காலை 10:00 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் அனைத்து மாநிலங்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுவதாகவும், விழா முடிந்ததும் மாவட்ட கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேலுார் தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்த், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பாபு, அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்..
கூட்டம் தொடங்கியதும் டிவியில் பிரதமரின் காணொலி வாயிலாக அனைத்து மாநில மக்களுடன் உரையாடி நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் பேசிக் கொண்டிருந்தார்.
அதை பற்றி கவலைப்படாமல், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கும்படி எம்.பி., கதிர் ஆனந்த் கேட்க அதற்கு மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் முதல் அதிகாரிகள் வரை பதில் சொல்லிக் கொண்டிருந்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள், பொது மக்கள் கேட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்துக் கொண்டிருந்தனர். இதை சில மூத்த நிருபர்கள் சுட்டிக் காட்டிய போது அதிகாரிகளும், எம்.பி., கதிர் ஆனந்தும் கண்டுகொள்ளவில்லை.
பிரதமர் மோடி பேசி முடிக்கும் வரை அவரது பேச்சை புறக்கணித்து விட்டு, விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் போல நடத்திக் கொண்டிருந்தனர். கூட்டம் முடிந்ததும் நலத்திட்ட உதவிகளை மறந்து விட்டு அதிகாரிகள் சென்று விட்டனர்.
இதனால் தான் நாளை ஆர்பாட்டம் நடத்தப்படுகிறது.
Comments
Post a Comment