மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது தமிழக முதல்வர் ஸ்டாலின்

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என வேலூரில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்..

முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மாலை வேலூர் கோட்டை மைதானத்தில்  ரூபாய் 62 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளையும், 32 கோடி மதிப்பீட்டில் புதிதாக துவக்கப்பட உள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்


 பின்னர் விழாவில் 30,423 பயனாளிகளுக்கு 313 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை  முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.


விழாவில் பேசிய முதலமைச்சர்,


காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது அதை தடுக்கக்கூடிய முழு உரிமை தமிழகத்திற்கு உள்ளது எனவும், 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி  உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது .

அந்த தீர்ப்பில் மேகதாது அணை கட்டக்கூடாது என்றும் கீழ் உள்ள மாநிலங்களில் ஒப்புதலை பெறாமலும், மத்திய அரசின் அனுமதி பெறாமல் அணை கட்டக் கூடாது என தெரிவித்தது.

இதனை பின்பற்றாமல் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பதாகும் .

எனவே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என கூறினார்.

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு அடிக்கடி நிதி ஒதுக்குவது சட்டங்களை கொண்டு வருவது மத்திய  அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தொடர்ந்து இவ்வாறு அவர்கள் செய்து வருகிறார்கள் .

ஆனால் தமிழகம் காவிரி விவகாரத்தில் ஒரு போதும் உரிமைகளை விட்டுதராது.

 அதனால் தான் நான் பிரதமருக்கு கடிதம் எழுதினேன் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அணை குறித்து விவாதிக்க கூடாது என நாங்கள் வலியுறுத்தினோம்


 மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார் அதனை நாங்கள் நம்புகிறோம் .

கர்நாடக அரசு அணிய கட்டுவதற்காக மத்திய தொழில்நுட்ப துறையிடம் அனுமதி கோரியுள்ளது மத்திய அரசு தொழில்நுட்ப உதவியை சுற்றுசூழல் அனுமதியையும் அளிக்க கூடாது 

தமிழக மக்களின் நலனுக்காக  காவிரியின் உரிமை கல்வி உரிமை உள்ளிட்ட சமூக நலனுக்காக தமிழக அரசு போராடி வருகிறது.

 மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசுக்கு செயல்படுவதாக ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 ஆனால் தமிழக மக்களின் நலனுக்காகவே  தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

எல்லா மக்களுக்கும் எல்லா உதவிகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழக அரசு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. 

நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் நிதி பங்கில் தமிழக அரசு அதிக பங்களிப்பை தருகிறது.

 தமிழக அரசு ஏற்றுமதியில் முன்னிலை மாநிலமாக திகழ்கிறது.

 குறிப்பாகதமிழகம்  ஜவுளித்துறையில் 19.4 சதவீதமும் கார் ஏற்றுமதியில் 32 சதவீதமும் தோல் ஏற்றுமதியில் 33 சதவீதமும் ஏற்றுமதி செய்து வருகிறது.

ஆனாலும் மத்திய அரசு தமிழக அரசுக்கு குறைந்த நிதியே வழங்கி வருகிறது மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற தான்.


மேலும்
வேலூர் மாவட்டத்தில்,
விரைவில் அறிவியல் கலைக்கல்லூரி,பல்நோக்கு அரசு மருத்துவமனை,
தொழிற்பேட்டை ,தொழிற் பூங்கா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக வேலூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அவர் கூறினார்.
சத்துவாச்சாரி வட்ட செயலாளர் வள்ளலார் ரமேஷ் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்