நலத்திட்டம் வழங்கும் விழா
*கனிமொழி கருணாநிதி தலைமையில் மீண்டும் கலை விழா 'நெய்தல்' திருவிழா*
திமுக மாநில மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுக் கலை ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஜூலை மாதம் 7 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 4 நாட்கள் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் மாபெரும் கலை விழா 'நெய்தல் - தூத்துக்குடி கலை விழா' நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்.
திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் தலைமையில் கனிமொழி அவர்கள் 2007 முதல் 2011 வரை சென்னை சங்கமம் என்ற விழாவினை பொங்கல் பண்டிகையினை ஒட்டி நடத்தினார். கடந்த 10 ஆண்டுகள் சென்னை சங்கமம் நடைபெறாத நிலையில், தற்போது திமுக ஆட்சி மீண்டும் அமைந்த பிறகு தூத்துக்குடியில் 'நெய்தல்' விழாவை நடத்துவதாகக் கனிமொழி கருணாநிதி அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இதில் உணவு திருவிழாவும் நடைபெறவுள்ளது. உங்களது வருகை கலைஞர்களை ஊக்கப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம் முடிந்த பிறகு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் "நான் முதல்வன்" திட்டம் குறித்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களுக்கு பதிலளித்தார்.
தமிழ்நாட்டின் தனித்துவத்தையும் அதன் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் திருவிழாவான 'நெய்தல்' - தூத்துக்குடி கலை விழா'வை ஒருங்கிணைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்திருக்கிறார் திமுக மாநில மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி.
தொன்மைமிக்க தமிழ் இசை, பாரம்பரியக் கலைகள், மற்றும் உணவோடு தூத்துக்குடியை அலங்கரிக்க வருகிறது 'நெய்தல்' கலை விழா. ஜூலை மாதம் 7 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 4 நாட்கள் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் மாபெரும் கலை விழா 'நெய்தல் - தூத்துக்குடி கலை விழா' நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்.
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் (07/07/2022) அன்று நடைபெற உள்ள இந்த "நெய்தல்" கலை விழாவிற்குரிய பிரத்தியேக லோகோ (Exclusive Logo) சமூக வலைத்தளத்தில் வெளியிடப் பட்டிருக்கிறது. அதை தனது சமூக வலைத்தள பக்கத்தின் காட்சி படமாக வைத்துள்ளார் கனிமொழி கருணாநிதி எம்.பி.
[29/06, 9:09 pm] Appa: இன்று (29/06/2022), கலைஞர் 99 "வேருக்கு விழா" கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி.
இந்த நிகழ்வில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பிரியா ராஜன் சென்னை மாநகராட்சி மேயர், பரந்தாமன் எம்.எல்.ஏ, தாயகம் கவி எம்.எல்.ஏ, தலைமை உரையாற்றியவர் சுதா தீனதயாளன், சென்னை கிழக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர்.ஆகியோர் கலந்து கொண்டனர்.
இடம்: YMCA, புரசைவாக்கம், சென்னை.
Comments
Post a Comment