எனக்கு எதற்கு விளம்பரம் தமிழக முதல்வர்
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் 400 கோடி ரூபாய் மதிப்பில்,
காலனி உற்பத்தி பூங்கா மையம் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு.
ராணிப்பேட்டையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து , சுமார்
70,000 பயனாளிகளுக்கு சுமார் 260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நல திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர்
விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்,
ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம்
36 ஆயிரம் பேர் பங்களிப்புடன்,
187 டன் நெகிழி கழிவுகளை 3 மணி நேரத்தில் சேகரித்து உலக சாதனை படைத்துள்ளது.இது போன்ற ஒரு சாதனை மாவட்ட நிர்வாகம் செய்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இதேபோல் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களும் பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
பொதுமக்களுக்கு மஞ்சப் பை வாழங்கும் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது என கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோல் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன ,
அதன் காரணமாக,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் பேருக்குவேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில்,250 ஏக்கர் பரப்பளவில்
400 கோடி ரூபாய் மதிப்பில்,
காலனி உற்பத்தி பூங்கா மையம் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ராணிப்பேட்டை சர்வதேச தோல் பொருட்கள் ஏற்றுமதி மையமாக மாறும்.
ஸ்டாலின் விளம்பர பிரியர்
எனக் கூறுகின்றனர்,
விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
விளிம்பு நிலையில் உள்ள மக்களை சந்திக்க சென்றால் ஸ்டாலின் விளம்பரப் பிரியர் என்று சிலர் கூறுகின்றனர்,
எனக்கு எதற்கு விளம்பரம்,
அரசியலில் நான் 55 ஆண்டுகள் உள்ளேன்.
பள்ளி மாணவர்களின் புத்தக பையில் ஏற்கனவே இருந்த முதலமைச்சரின் புகைப்படம் போடப்பட்டு இருந்தது.
அதனை அகற்ற வேண்டும் என
கூறினார்கள்.
நான் தான் அதை வேண்டாம் எனக் கூறினேன்.
17 கோடி ரூபாய் .அரசுக்கு வீன் செலவு ஏற்படும் என்பதை அறிந்து,
பள்ளி மாணவர்களின் புத்தகப் பையில் முதல்வரான என் படம் போடாமல் ,
ஏற்கனவே இருந்த முதலமைச்சரின் படத்தை அப்படியே வழங்குமாறு நான் கூறினேன் .
எனக்கு விளம்பரம் தேவையில்லை.
27 சதவீத இட ஒதுக்கீடு யார் பெற்று தந்தது என்று நினைத்தால் என் முகம் நினைவுக்கு வரும்,
அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை யார் அறிவித்தது என்றால் என் முகம் நினைவுக்கு வரும்,
சமத்துவ நாள் என்று யார் அறிவித்தது என்றால் என் முகம் நினைவுக்கு வரும்,
பெண்கள் அனைவரும் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்தது யார் என்றால் என் முகம் நினைவுக்கு வரும்,
இது போன்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அந்த திட்டங்களை எல்லாம் நினைத்தால் என் முகம் நினைவுக்கு வரும்
நான் எதற்கு விளம்பரம் தேட வேண்டும்.
நான் என்றால் நான் மட்டுமல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டு கலவையாக இந்த ஆட்சியை நடத்தி வருகிறோம்.
இது நமக்கான ஆட்சி,
மக்களுக்கான ஆட்சி,
கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகம் சரிவை சந்தித்துள்ளது. அதனை சரிகட்ட இந்த அரசு ஆட்சி செய்து வருகிறது.
தமிழகம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
எனவே தமிழக மக்களின் நலன் கருதி,
தமிழகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி காண வேண்டும் என்பதற்காக ,,
என் சக்தியை மீறி உழைப்பேன் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி , வேலு, எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த்ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், வட்ட செயலாளர் வள்ளலார் ரமேஷ் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment