முதல்வரின் நாளைய நிகழ்சிகள்
ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக அலுவலகம் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
நாள்.30.06.2022 வியாழக்கிழமை.
1.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூபாய் 118.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தினை தனது திருக்கரங்களால் திறந்து வைக்கின்றார்கள். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக அறையில் குத்து விளக்கு ஏற்றுகின்றார்கள் தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்றை நடுகிறார்கள்.
இடம் பாரதி நகர் காலை.9.30 மணி.
2. இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்பிக்க உள்ளார்கள்.
நேரம் காலை 09.45 மணி.
3. விழா முடிவுற்றவுடன் பிஞ்சு ஏறியினை சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாற்றி அமைக்கும் திட்டப்பணிகள் குறித்து மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் அவர்கள் பிஞ்சு ஏரியினை நேரடியாக அழைத்துச் சென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு திட்டப் பணிகள் குறித்து விவரிக்கின்றார்கள்.
நேரம் காலை 11:15 மணி.
Comments
Post a Comment