தர்ணா
அரசு ஊழியர்கள் தர்ணா
வேலுார்
கோரிக்கை வலியுறுத்தி வேலுாரில் அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
வேலுார் மண்டலம், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை சங்கங்களின் கூட்டு போராட்டக் குழு சார்பில் வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தினர். மாவட்ட அமைப்பாளர் வெங்கிடாசலம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் இராஜாமணி தொடங்கி வைத்தார்.
சங்க நிர்வாகிகள் ஜெயந்தி, பிரேம் ஆனந்த், ரவி, ரமேஷ், சீனிவாசன், ஆறுமுகம், செண்பகவள்ளி, சந்திரன், மாவட்ட அமைப்பாளர் சரவணராஜ் பங்கேற்றனர். இதில் 3 சதவீதம் அகவிலைப்படி வழங்குதல், சரண்டர் மீண்டும் வழங்குவது என 23 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Comments
Post a Comment