விசாரணை

ஆற்காடு அருகே பானிபூரியில் அட்டைப்பூச்சி - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்  நடவடிக்கை எடுக்குமா உணவுத்துறை அதிகாரிகள்..

தமிழகத்தில் சமீப காலமாக உணவுப் பொருட்கள் உட்கொண்டு அதிக அளவில் உயிர் இழப்புக்கள் நடைபெறும் சூழலில்,

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தாஜ்புரா பெரியார் நகரின் உள்ள ஆற்காடு - ஆரணி செல்லும் சாலையில் பானிபூரி கடையை நடத்தி வருபவர் பழனி இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் பானிப்பூரி பார்சலை வாங்கி வந்து வீட்டில் பிரித்து தனது குழந்தைக்கு ஊட்டி முடித்தபோது பானிபூரியில் அட்டைப்பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாணியம்பாடியில் பேக்கரி கடையில் வாங்கிய பிரட்டில் கரப்பான்பூச்சி இருந்தது.

இதுபோன்று அஜாக்கிறதையாக செயல்படும் உணவு கடைகளில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர் மேலும் உணவு பாதுகாப்பு துறை லைசென்ஸ் இல்லாமல் நடத்தும் இதுபோன்ற பானிபூரி கடைகளை முற்றிலும் தடை செய்யப்படுவதோடு அடிக்கடி ஆய்வுகளை மேற்கொண்டு உணவின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டுமென உணவு பிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது குறித்து உணவு துறை அதிகாரியை தொடர்புக் கொண்டு பேசியபோது அலச்சியமான பதிலை கூறினார்..

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்