காலை தரிசனம்
🚩
*காலை தரிசனம் !*
*திரு ஆடிப்பூர தரிசனம் !!*
"சூடிக் கொடுத்தாள் பாவை படித்தாள்
சுடராக என்னாலும் தமிழ் வானில் ஜொலித்தாள்..!
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்..!
கன்னித்தமிழ் தேவி மைக்கண்ணண் அவள் ஆவி..!
தன் காதல் மலர் தூவி
மாலையிட்டாள்..!!"
சுபகிருது வருடம் :
ஆடி மாதம் 16 ஆம் நாள்....!
ஆகஸ்டு மாதம் : முதல் தேதி :
(01-08-2022)
இன்று
திங்கட்கிழமை !
சூரிய உதயம் :
காலை : 06-12 மணி அளவில் !
சூரிய அஸ்தமனம் :
மாலை : 06-36 மணி அளவில் !
இன்றைய திதி : வளர்பிறை :
சதுர்த்தி !
சதுர்த்தி..
பின் இரவு 03-45 மணி வரை அதன் பிறகு பஞ்சமி !!
இன்றைய நட்சத்திரம் :
பூரம்...
மதியம் 03-40 மணி வரை ! அதன் பிறகு உத்திரம் !!
இன்று
கீழ் நோக்கு நாள் !
யோகம் :
சித்தயோகம் !!
சந்திராஷ்டமம் :
இன்றும்
மகர ராசிக்கு சந்திராஷ்டமம் !!
ராகுகாலம் :
காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !!
எமகண்டம் :
காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை !!
குளிகை :
மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !!
சூலம் : கிழக்கு !
பரிகாரம் : தயிர் !!
கரணம் :
காலை: 09-00 மணி முதல் 10-30 மணி வரை !
நல்ல நேரம் :
மதியம் :
12-00 மணி முதல் 02-00 மணி வரை !
03-00 மணி முதல் 04-00 மணி வரை !
மாலை :
06-00 மணி முதல் 09-00 மணி வரை !
இன்றைய சுப ஓரைகள் :
புதன் ஓரை :
காலை : 12-00 மணி முதல் 01-00 மணி வரை !!
இன்றைய சிறப்புகள் :
இன்று
வளர்பிறை சதுர்த்தி விரதம் !
இன்று
காலை கணபதி தரிசனம் செய்ய வேண்டிய நாள் !
இன்று
மாலை சோம வார சிவ தரிசனம் செய்ய வேண்டிய நாள் !
இன்று
திரு ஆடிப்பூரம் !
இன்று
தாயார்ஆண்டாள் வழிபாடு செய்ய வேண்டிய நாள் !!
ஆடிமாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தாள் !
இன்று
தாயார் ஆண்டாளை வழிபட வேண்டிய நாள் !
"சூடிக் கொடுத்தாள் கோதை ஆண்டாள்..
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்..!"
தான் சூடிப் பார்த்த பிறகே மாலைகளை திருவரங்கனுக்கு சூடக் கொடுத்த சுடர்க்கொடி !
தாயார் ஆண்டாள் மகாலஷ்மியின் சொரூபம் !
கோதை நாச்சியார் பூமாதேவியின் அம்சம் !
ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திர நாளன்று தாயார் ஆண்டாளை வழிபட வேண்டும் !
ஒவ்வொரு ஆன்மீக அன்பர்களும் தம் வாழ்நாளில் ஒரு முறையாவது..
ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாள் நாச்சியாரை வழிபட வேண்டும் !
தமிழக அரசின் முத்திரை சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் போபுரமே..!
"கோதை ஆண்டாள்..!
தமிழை ஆண்டாள்..!
கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்..!!"
கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க ..
ஒவ்வொரு பூரம் நட்சத்திர நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி ..
கோயிலுக்குச் சென்று ஆண்டாள் அருளிய திருப்பாவையைப் பாடி வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் !!"
இந்து மதத்தில், எத்தனையோ தெய்வப் பெண்களைப் பற்றி படித்திருப்போம்.!
உலக நன்மைக்காக லட்சுமி தாயார் சீதா, ருக்மணி என்ற அவதாரங்களை எடுத்து பூமிக்கு வந்த போது..
பகவான் விஷ்ணுவாக,ராமனாக, கிருஷ்ணனாக மனித அவதாரமெடுத்து பூமிக்கு வந்தார்..!
இவர்களும் தங்கள் பக்தியின் காரணமாக ராம,கிருஷ்ணரை கணவராக அடைந்தனர்..!
ஆனால், பூமாதேவி...ஆண்டாளாகப் பூமியில் பிறந்த போது,
*அவளுக்காக, பகவான் பூமியில் பிறக்கவில்லை..!*
கோவிலிலே அர்ச்சாவதாரமாக (சிலை வடிவில்) சயனம் கொண்டிருந்த பெருமாளை,
கணவனாக அடைய வேண்டும் என, மனதிற்குள் உறுதி பூண்டாள் ஆண்டாள்.!
மகளின் இந்த விசித்திரமான ஆசையை அறிந்த பெரியாழ்வார், 'மானிடப் பெண் ஒருத்தி,
கோவிலில் சிலையாக இருக்கும் கடவுளை எவ்வாறு கணவனாக அடைய முடியும் என நினைத்து வேதனைப்பட்டார் !
ஆனால், ஆண்டாள் அதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை !
அவள் மனதில், பெருமாள் மட்டுமே நீக்கமற நிறைந்திருந்ததால்...
கண்ணன் சிலையாக இருந்தால் என்ன, அவன்தான் தன் கணவன் என்பதில் உறுதியாக இருந்தாள்..!
பெரியாழ்வார், தினமும் பூமாலை கட்டி பெருமாளுக்கு சூட எடுத்துச் செல்வார். அதை யாருக்கும் தெரியாமல் எடுத்து,
அந்த மாலை, பெருமாளுக்கு பொருத்தமாக இருக்குமா என...
தன் கழுத்தில் அணிந்து அழகு பார்ப்பாள் ஆண்டாள்.!
ஒருசமயம், அவள் அவ்வாறு அழகு பார்த்த போது...அவளது கூந்தல் முடி ஒன்று அதில் ஒட்டிக்கொள்ள, குட்டு உடைந்து போனது..!
பெரியாழ்வார் அவளை கண்டித்து, வேறு ஒரு மாலை கட்டி எடுத்துச் சென்றார்.!
ஆனால், பெருமாளோ, 'பக்தை அணிந்து தரும் மாலை தான் வேண்டும்...' எனச் சொல்லி, ஆண்டாளின் காதலை ஏற்றுக் கொண்டார்.!
கடவுள் மேல் அவள் கொண்ட ஆத்மார்த்தமான பக்தியும், காதலும்,
சிலையாக இருந்த தெய்வத்தையும், மனம் உருக வைத்து, அவளை ஏற்றுக் கொள்ள வைத்தது !
தான் நினைத்த திருமாலையே கணவனாக அடைந்து,
எந்த மானிட பெண்ணும் செய்யாத சாதனையைச் செய்தாள் ஆண்டாள்.!
அந்த தெய்வமும், அவள் வாழும் காலத்திலேயே அவளுக்கு அனுக்கிரகம் செய்தது !
தன் மனதையே யாக குண்டலமாக்கி, தன்னுடைய பக்தியையும், காதலையும் நெருப்பாக்கி, தன் ஆன்மாவையே..
ஹவிசாக இட்டு, திருப்பாவை என்னும் மந்திரத்தால் அவனைத் துதித்து, தான் நினைத்ததை சாதித்தாள் ஆண்டாள்.!
இத்தகைய வைராக்கிய உணர்வு கொண்ட இந்த சாதனைப் பெண்மணி..
ஆடிமாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தாள் !
ஆண்டாள் அவதரித்த ஒவ்வொரு மாத பூரம் நட்சத்திரமும் வழிபாட்டுக்குரியது !
தங்கள் லட்சியத்தில் ஒருமித்த ஈடுபாடும்..
அதை அடைய வேண்டும் என்ற வைராக்கிய உணர்வும் இருந்தால்..
நினைத்ததை சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக கோதை ஆண்டாளே வாழ்ந்து காட்டியுள்ளாள்..!!
ஆண்டாள் நாச்சியார் பூமா தேவியின் அம்சம் ! மகாலட்சுமியின் மறு வடிவம் !!
"திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே..
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே..
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே..
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே..
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே..
உயர் அரங்கர்க்கே கன்னி யுகந்தளித்தாள் வாழியே.
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே..
வண்புதுவை நகர்கோதை மலர்பதங்கள் வாழியே... வாழியவே..!!"
*தாயார் ஆண்டாள் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும் !!*
*சௌஜன்யம்..!*
*அன்யோன்யம் .. !!*
*ஆத்மார்த்தம்..!*
*தேசியம்..!*
*தெய்வீகம்..! பேரின்பம் ...!!*
*அன்புடன் ரமேஷ்*🚩🚩
Comments
Post a Comment