கைது சிறையில் அடைப்பு

🔸  *தமிழக இளைஞரை அதிரடியாக கைது செய்த மத்திய உளவுத்துறை!*


*ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி பகுதியை சேர்ந்தவர் மீர் ஹிதாயத் அலி, இவரது மகன் அனஸ் அலி வேலூர் மாவட்டத்தில் மேல் விஷாரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு (B.E ., Mech Third year student) படித்து வருகிறார்.*

*இவரை இன்று அதிகாலை அவரது வீட்டிலிருந்து விசாரணைக்காக மத்திய உளவு துறையைச் சேர்ந்த அதிகாரிகள், வேலூர் மாவட்டம் அணைகட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சுமார் 15 மணி நேரம் மத்திய உளவுத்துறை (IB), மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவின் (SIU) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.*

*இதில் மாணவன் இந்தியாவில் தடை செய்யயட்ட பங்ளாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து செயல்படும் இசுலாமிய இயக்கங்களின் FaceBook, instagram* *போன்ற சமூக வலை தளங்களில் பதிவிடப்படும் பதிவுகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவற்றை விரும்பியும் (Like), பகிர்ந்து (share) உள்ளார். மேலும் தடை செய்யப்பட்ட இசுலாமிய இயக்கத்தின் Instagram பக்கத்தை பின் தொடர்ந்துள்ளார்.*

*மேலும் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் இணைவது குறித்த கோப்புகளையும் சேகரித்து உள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 செல்போன்கள், 1 லேப்டாப் ஆகியவற்றை மத்திய உளவு துறையினரின் தொழில் நுட்ப பிரிவு மூலம் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மாணவன் அனஸ் அலியின்* *மீது121, 122, 125, 18,18A, 20 , 38,39* *ஆகிய 08 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆம்பூர் குற்றவியல் நீதி துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.*

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்