ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம்
25-07-2022
*ராணிப்பேட்டை
சோளிங்கர் வாலாஜாபேட்டையில் தமிழக சட்டபேரவை பொதுக்கணக்கு குழுவினரின் கள ஆய்வு பணி நடைபெற்றது*
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டபேரவை பொதுகணக்கு குழுவினரின் கள ஆய்வானது சோளிங்கர் மற்றும் வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது இந்த ஆய்வினை சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுத்தலைவர் செல்வப்பருந்தகை மற்றும் சட்ட உறுப்பினர்கள் ஆகியோர் கள ஆய்வை மேற்கொண்டனர்.
பின்னர் முதலில் சோளிங்கர் சென்ற குழுவினர்கள் அரசு மருத்துவமனை மற்றும் அங்குள்ள கஞ்சாஹீப் கல்லறை பார்வையிட்ட பின்னர் வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் சித்தாப்பிரிவு அவசரப்பிரவு இயற்கைப்பிரிவு நோயாளிகளின் படுக்கையறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்ற சட்டபேரவை பொதுக்குழுவினர் அங்கு உள்ள துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை
மேலும் கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு தீவிர சிகிச்சை பிரிவு எந்த வித ஆய்வு செய்யப்படாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது பிறகு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கும் போது ஜெனரேட்டர் யூனிட் பேட்டரி பேக்கப் வசதிகள் இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார் பின்னர் இதுகுறித்து சம்பந்தபட்ட சுகாரத்துறை செயலாளர் மற்றும் இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்படுமென்றும் மாநிலத்தின் பல மாவட்டங்களில் சுற்றுபயணம் செய்ததில் தங்களுக்கு தற்போதய ஆய்வில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சரின் பணிகள் அனைத்தும் திருப்தி அளிப்பதாகவும் சட்டபேரவை பொதுக்கணக்கு குழுவினர்கள் தெரிவித்தனர்.
மேலும் பேசிய அவர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனங்கள் எந்த ஒரு அனுமதி இல்லாமல் நிலத்தடி நீரை திருடி இருப்பதாகவும் அந்த தனியார் நிறுவனத்துக்கு காலாவதி ஆன பின்னரும் என்.ஓ.சி சான்றுகள் வழங்கப்பட்டு நிலத்தடி நீரை திருடி இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இந்த ஆய்வின் போது மாநில கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் காந்தி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சட்டமன்ற பேரவை உறுப்பினர்கள் சிந்தனைசெல்வன் ஒய்.பிரகாஷ் வேல்முருகன்
ஜவாஹிருல்லா ஈஸ்வரப்பன்
முனிரத்தினம் சுதர்சனம் ஈஸ்வரப்பன் மற்றும் பொதுக் கணக்கு குழு இணை செயலாளர் தேன்மொழி துணை செயலாளர் ரேவதி என துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
Comments
Post a Comment