இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும் இன்றைய வாழ்க்கையில், பணம், பொருள், வீடு, கார் இருந்தால் போதாது. அதற்கு மேலாக உடல் ஆரோக்கியம் இருந்தால் தான் இவற்றையெல்லாம் அனுபவிக்க முடியும். உடல் ஆரோக்கியம் பெறவும், மன அமைதி பெற்று வாழவும் வழிபட வேண்டிய கடவுள் தன்வந்திரி பகவான். தன்வந்திரி பகவானுக்கு தனிக்கோவில் வேலுார் மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே, கீழ்புதுப்பேட்டையில், உள்ளது. கோவிலின் பெயர் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம். இதை அமைத்தவர் ஸ்ரீமுரளிதர சுவாமிகள். இங்கு அழகிய திருக்கோலத்தில் தன்வந்திரி பகவன் காட்சி அளிக்கின்றார். 75 க்கும் மேற்பட்ட சுவாமி சன்னதிகள், 468 சித்தர்கள் சன்னதி உள்ளது. மூலவர்– தன்வந்திரி பகவான் தாயார்– ஆரோக்கிய லட்சுமி உற்சவர்– ஸ்ரீவைத்ய லட்சுமி ஸமேத வைத்தியராஜன் ஸ்தல விருட்சம்– புன்னை மரம் தீர்த்தம்–வேகவதி நதி பிரசாதம்– சுக்கு, வெல்லம், தைலம் நேர்த்திக்கடன்– சுக்கு, வெல்லம், நல்லெண்ணை, பச்சரிசி, வெண்ணெய், மூலிகை, தேன், நெய் போன்ற பொருட்களினால் தன்வந்திரி பகவானுக்கு அபிேஷகம், யாகம் செய்யலாம் தல புராணம்– தேவர...
Comments
Post a Comment