சீறுடைகள் வழங்கல்


காட்பாடி அரசு ஆண்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 50 ஆயிரம் மதிப்பீட்டில் சீறுடைகள் அறிவியல் ஆசிரியர் ஜி.டி.பாபு வழங்கினார்.

 

     காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஜி.டி.பாபு தனது சகோதரர் ஜி.டி.தியாகராஜன் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் பயிலும் நரிக்குறவர் இன மாணவர்கள் மற்றும் வசதியில்லாத மாணவர்களை கண்டறிந்து 50 மாணவர்களுக்கு ஐம்பதாயிரம் மதிப்பீட்டில் சீறுடைகள் வாங்கி அவர்களுக்கு ஏற்ற வகையில் தைத்து தனது சொந்த செலவில் வழங்கினார். 

இதற்கான நிகழ்வு இன்று பள்ளி வளாகத்தில் பள்ளி தலைமையாசிரியர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை தலைமையில் நடைபெற்றது.  உதவி தலைமையாசிரியர்கள் எஸ்.குமரன், ஆர்.கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் கலந்து கொண்டு சீறுடைகளை வழங்கி பேசினார்

7ஆம் வகுப்பு ஆசிரியை கனிமொழி மற்றும் மாணவர்கள் தனது சொந்த செலவில் மூன்று மின்விசிறிகளை வழங்கினார்..

     முன்னதாக கே.பி.சிவஞானம் வரவேற்றார்.  ஆசிரியர்கள் ச.சச்சிதானந்தம், ஜெயசீலன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்