குழப்பம்

வேலூர்    

 மேயர் அதிமுகவுக்கு ஆதரவாக பேசுவதாக துணை மேயரும் மண்டல தலைவரும் வாக்குவாதம் - மாமன்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம் 
______________________________
    வேலூர்மாவட்டம்,வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது இதில் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் மற்றும் துணை மேயர் சுனில் குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர் இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பேசுகையில் பாலாற்றில் குப்பைகளை மாநகராட்சியினர் மக்களும் கொட்டுவதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேசினார்கள் மேலும் சாலைகளை சீரமைக்க வேண்டும் தெருவிளக்குகள் எரிவதில்லை அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மண்டலம் ஒன்றிற்கு போதிய திட்டபணிகள் ஒதுக்கவில்லை என கூறி பேசினார்கள் அப்போது மேயர் அதிமுகவுக்கு ஆதரவாக பேசுவதாக கூறி துணை மேயர் சுனில் மற்றும் ஒன்றாவது மண்டல குழுதலைவர் புஷ்பலதா வன்னியராஜா ஆகியோர் மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதனால் மன்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியதால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்