வெள்ளம்
தரைப்பாலம் வெள்ள நீரில்
மூழ்கியது
ஆம்பூர்,
ஆம்பூர் அருகே, பச்சகுப்பம் தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியதால் 25 கிராமங்கள் துண்டிக்கப்பட்டது.
திருப்பத்துார் மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வாணியம்பாடி, ஆம்பூர் பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆம்பூர் அருகே பாலாற்றின் குறுக்கே உள்ள பச்சகுப்பம் தரைப்பாலம் இன்று அதிகாலை 2:00 மணிக்கு வெள்ள நீரில் மூழ்கியது. இதனால் ஆம்பூரிலிருந்து செல்லும் பச்சகுப்பம், வெள்ளக்குட்டை, பேர்ணாம்பட்டு, வளத்துார் உள்ளிட்ட 25 கிராமங்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் இப்பகுதி மக்கள் 50 கி.மீ., சுற்றிக் கொண்டு குடியாத்தம், பள்ளிகொண்டா வழியாக ஆம்பூருக்கு செல்கின்றனர். ஏற்கனவே வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாதனுார் பாலாற்று தரைப்பாலம் தற்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்த பாலமும் உடையும் நிலையில் உள்ளதால், அதை சீரமைக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment