மறியல்
சாலை வசதிக்காக
மக்கள் சாலை மறியல்
வேலுார்
வேலுாரில், சாலை வசதிக்காக பொது மக்கள் சாலை மறியல் செய்தனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலுார் சத்துவாச்சாரியில் பல இடங்களில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் சத்துவாச்சாரி சி.எம்.சி., காலனி, விஜயராகவவுரம், பகுதி ஒன்று, இரண்டு பகுதிகளில் மக்கள் செல்ல முடியாதபடி சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
இந்த பகுதிகளில் விரைவாக சாலைகள் அமைக்கும் பணிகள் முடிக்க வலிறுத்தி சத்துவாச்சாரி விஜயராகவபுரத்தில் மக்கள் இன்று காலை 11:00 சாலை மறியிலில் ஈடுபட்டனர். விரைவில் சாலை வசதி செய்து கொடுப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் மதியம் 1:00 மணிக்கு கலைந்து சென்றனர்.
Comments
Post a Comment