கைது
வேலூர் 31-8-22
ஆந்திராவில் இருந்து அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது.
வேலூர்மாவட்டம்,காட்பாடி அடுத்த தமிழக - ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் பேபி மத்திய நுண்ணறிவு பிரிவு காவலர்கள் சிவக்குமார் ரங்கன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது திருப்பதியில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் தமிழக அரசு பேருந்தில் பயணித்த சந்தேகத்திற்கிடமான இளைஞரை சோதனை செய்த போது அவர் கஞ்சா கடத்துவது தெரியவந்து. இதனையடுத்து கேரள மாநிலத்தை சேர்ந்த முகமது அர்ஷத் (22) என்ற இளைஞரை கைது செய்து அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Comments
Post a Comment