பலி
குடியாத்தம்
*குடியாத்தம் அருகே கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்து- 2500 கோழிகள் தீயில் கருகி பலி*
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கள் புதூர் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணை உள்ளது
இந்த கோழி பண்ணையில் 2500 கோழிகளை வைத்து வளத்து வருகிறார் இதனிடையே இன்று இரவு திடீரென கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டு கோழிப்பண்ணை முழுவதும் தீ பரவியது உடனடியாக இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர்
சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் மேலும் கோழி பண்ணையில் இருந்த 2500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியானது மேலும் இந்த தீ விபத்து காரணம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Comments
Post a Comment