திருட்டு
3 கோவில்களில் உண்டியல்
உடைத்து காணிக்கை பணம்
திருட்டு
அரக்கோணம்
அரக்கோணம் அருகே, மூன்று கோவில்களில் பூட்டை உடைத்து காணிக்கை பணம் திருட்டு போனது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலம் மெயின்தெருவில் அடுத்தடுத்து அகத்தீஸ்வரர், நாக முனியீஸ்வரி, பொன்னியம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு 8:00 மணிக்கு கோவில்களை பூட்டி வீட்டு சென்றனர். இன்று காலை 8:00 மணிக்கு கோவிலை திறக்க வந்த போது, மூன்று கோவில்களிலும் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் காணிக்கை பணம் திருட்டு போனது. பொன்னியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் அணிவிந்திருந்த 10 பவுன் தாலி, 2 பவுன் பொட்டு திருட்டு போனது தெரியவந்தது. தக்கோலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Comments
Post a Comment