காலை தரிசனம்
🚩
*காலை தரிசனம் !*
*ஸ்ரீ மகாலட்சுமி தரிசனம் !!*
இன்று
வியாழக்கிழமை !
சுப கிருது வருடம் :
ஆவணி மாதம் 16 ஆம் நாள் !
செப்டம்பர் மாதம் : முதல் தேதி (01-09-2022)
சூரிய உதயம் :
காலை : 06-12 மணி அளவில் !
சூரிய அஸ்தமனம் :
மாலை : 06-24 மணி அளவில் !
இன்றைய திதி : வளர்பிறை :
பஞ்சமி..
மதியம் 01-30 மணி வரை அதன் பிறகு சஷ்டி !!
இன்றைய நட்சத்திரம் :
சுவாதி..
இரவு 12-40 மணி வரை ! அதன் பிறகு விசாகம் !!
இன்று
சம நோக்கு நாள் !
யோகம் :
அமிர்தயோகம் ! சித்தயோகம் !!
சந்திராஷ்டமம் :
இன்று
மீன ராசிக்கு சந்திராஷ்டமம் !!
ராகுகாலம் :
மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !!
எமகண்டம் :
காலை : 06-00 மணி முதல் 07-30 மணி வரை !!
குளிகை :
காலை : 09-00 மணி முதல் 10-30 மணி வரை !!
சூலம் : தெற்கு !
பரிகாரம் : தைலம் !!
கரணம் :
மாலை: 03-00 மணி முதல் 04-30 மணி வரை !
நல்ல நேரம் :
காலை :
09-00 மணி முதல் 12-00 மணி வரை !
மாலை :
04-00 மணி முதல் 07-00 மணி வரை !
இரவு :
08-00 மணி முதல் 09-00 மணி வரை !
இன்றைய சுப ஓரைகள் :
சுக்ர ஓரை :
காலை : 09-00 மணி முதல் 10-00 மணி வரை !!
புதன் ஓரை :
காலை : 10-00 மணி முதல் 11-00 மணி வரை !!
சந்திர ஓரை :
காலை : 11-00 மணி முதல் 12-00 மணி வரை !!
இன்றைய சிறப்புகள் :
இன்று
குருவாரம் !
இன்று
அவரவருக்கு பிடித்தமான குருமார்களை வழிபடவேண்டிய நாள் !
இன்று
ரிஷி பஞ்சமி !
இன்று
மகாலட்சுமி விரதம் !
இன்று
சுப முகூர்த்த நாள் !!
விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதியை ‘ரிஷி பஞ்சமி’ என்று அழைக்கிறார்கள் !
அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபாடு செய்பவர்களின் இல்லங்களில் வளம் பெருகும் என்பது ஐதீகம் !
இந்த விரதம் வேண்டிய வரங்களைப் பெறவும்,பெண்களின் சவுபாக்கியம் அதிகரிக்கவும் வேண்டிச் செய்யப்படும் விரதமாகும்....!
ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த ரிஷி பஞ்சமி விரதத்தை கணவனுடனோ அல்லது தனியாகவோ செய்ய வேண்டும். !
இன்று
மகாலட்சுமி விரதம் !!
மகாலட்சுமி விரதம் என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி நோக்கும் நோன்பாகும்...!
ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும்,
இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது !!
இந்த இரண்டு விரதங்களும் பெரும்பாலும் வட இந்தியாவில்தான் மேற்கொள்ளப்படுகிறது !
நாளைய விசேஷங்கள் :
நாளை
சஷ்டி விரதம் !
*மகாலட்சுமி அருளாளே இன்றைய நாளும் திருநாளாகட்டும்..!*
*சௌஜன்யம்..!*
*அன்யோன்யம் .. !!*
*ஆத்மார்த்தம்..!*
*தேசியம்..!*
*தெய்வீகம்..! பேரின்பம் ...!!*
*அன்புடன் ரமேஷ்.*🚩🚩
Comments
Post a Comment