பலி
6,500 கோழிகள்
தீயில் கருகி பலி
குடியாத்தம்
குடியாத்தம் அருகே 6,500 கோழிகள் தீயில் கருகி இறந்தன.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே எர்த்தாங்கல் புதுார் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன், 55. இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை வைத்து 6,500 கோழிகள் வளர்த்து வருகிறார். இன்று அதிகாலை 1:00 மணிக்கு கோழிப்பண்ணையில் தீப்பிடித்து எரிந்தது. இதில் கோழிப்பண்ணை முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் பண்ணையிலிருந்த 6,500 கோழிகள் தீயில் கருகி இறந்தன.
மின் கசிவால் கோழிப்பண்ணை தீப்பிடித்து எரிந்ததும், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கோழிகள் இறந்ததும் குடியாத்தம் தாலுகா போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
Comments
Post a Comment