கொலை

🔸  *வேலூர் மாவட்டம்*

*பெண் தலையில்*
*பாறாங்கல்லை போட்டு*
*கொன்ற கொடூரம்..*
*பாலியல் வன்கொடுமை காரணமா?..* *போலீசார்*
*விசாரணை..!*


*வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகில் அரவட்லா மலை பகுதியில் இருக்கும் பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் வசிப்பவர் முருகேசன்.* *இவருக்கு வள்ளியம்மாள் (60), முனியம்மாள் (55) என இரண்டு மனைவிகள்.* *இதில் முதல் மனைவியான வள்ளியம்மாளுக்கு தங்கராஜ், வடிவேல் என இரண்டு மகன்களும் தவமணி ஜெயலட்சுமி என இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.*
*கடந்த 20 வருடங்களுக்கு முன் தனது கணவனை விட்டு பிரிந்து வந்த வள்ளியம்மாள் அதே கிராமத்தில் இளைய மகன் வடிவேல் வீட்டில் இருந்து கொண்டு ஆடுகள் வளர்த்து வந்தார்.*
*நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை மாலையில் ஓட்டி கொண்டு வந்து பட்டியில் அடைத்து விட்டு சகோதரி மகள் லட்சுமி வீட்டிற்கு சென்றார். அங்கு இரவு 10.30 மணி வரை இருந்த வள்ளியம்மாள் தனது வீட்டுக்கு செல்வதாக கூறி கிளம்பி இருக்கிறார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.*

*இந்நிலையில் ரோட்டோரம் இருக்கும் நாராயணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று காலை 6 மணியளவில் வள்ளியம்மாள் தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.*
*மேலும், அவர் அணிந்திருந்த ஆடைகள் கலைந்து கிடந்தன. அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து விட்டு பேரணாம்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.*

*உடனடியாக குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி மற்றும் பேரணாம்பட்டு காவல்துறையினர் விரைந்து வந்து வள்ளியம்மாள் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்புவதற்கு ஆயத்தம் செய்தனர், ஆனால் அவரது குடும்பத்தினர் உடலை எடுக்கவிடாமல் தடுத்து கொலையாளிகளை கைது செய்து விட்டு எடுத்து செல்லுங்கள் என சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.*

*இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.*
*சுமார் 5 மணி நேரத்துக்கு பின் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்* வள்ளியம்மாள் உடலை காலை 11.30 மணியளவில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் சம்பவம் நடந்த இடத்தை சென்று பார்வையிட்டு விசாரணை செய்தார். திருவண்ணாமலையிலிருந்து மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்து சுமார் 200 மீட்டர் தூரம் ஓடிச் சென்று பாண்டு என்பவர் வீட்டு முன்பு சுற்றி,* *சுற்றி வந்து நின்றது. தடவியல் கைரேகை நிபுணர் ஜேம்ஸ் அந்தோணிராஜ் சம்பவம் நடந்த இடத்தை சோதனை செய்தார். இது சம்மந்தமாக பேரணாம்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வள்ளியம்மாளை கொலை செய்த குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.*


*பெண் தலையில் பாறாங்கல்லை போட்டு கொன்ற கொடூரம்.. பாலியல் வன்கொடுமை காரணமா?.. போலீசார் விசாரணை..!*

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்