திருட்டு
2 வீடுகளில் 100 பவுன்
திருட்டு
ஜோலார்பேட்டை
இரண்டு வீடுகளில் 100 பவுன் நகை, 5 லட்சம் ரூபாய் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கருப்பனுாரை சேர்ந்தவர் சந்திரன், 65. இவர் அரசு போக்குவரத்துக்கழகத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 27 ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இன்று காலை 10:00 மணிக்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்ததில், பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 20 பவுன் நகை, 4 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. ஜோலார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த வாணியம்பேட்டையை சேர்ந்தவர் பிரபாகரன், 59. சென்னையில் உள்ள ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று முன்தினம் வீட்டை பூட்டிக் கொண்டு சேலத்திற்கு சென்றார்.
நேற்று காலை 11:00 மணிக்கு வந்த போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் பீரோவிலிருந்த 80 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் திருடிச் சென்றது தெரியவந்தது. அரக்கோணம் போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்.
Comments
Post a Comment