கைது
பள்ளிக்கு செல்லாமல்
மாணவியை திருமணம்
செய்த மாணவர் கைது
குடியாத்தம்
குடியாத்தம் அருகே, பள்ளிக்கு செல்லாமல் மாணவியை திருமணம் செய்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கே.வி. குப்பத்தில் தனியார் பள்ளி 16 வயதுள்ள மாணவி 10ம் வகுப்பு படித்து வருகிறார். குடியாத்தத்தை சேர்ந்த 17 வயதுள்ள மாணவர் ஒருவர் அதே பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இருவரும் பள்ளிக்கு செல்லாமல் காதலித்து வந்தனர். பெற்றோருக்கு தெரிவித்ததில், படிக்கும் வயதில் காதலா என்று கேட்டுள்ளனர்.
இதனால் இருவரும் கடந்த 20ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினர். இது குறித்து பெற்றோர் தனித்தனியாக குடியாத்தம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், ஆந்திரா மாநிலம், சித்துாரில் உள்ள ஓட்டலில் தங்கியிருப்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை மீட்டு வந்தனர். குடியாத்தம் போலீசார் இன்று போஸ்கோவில் மாணவரை கைது செய்து, சென்னை கெல்லிசில் உள்ள சிறுவர் சிறையில் அடைத்தனர். மாணவியை வேலுார் அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
Comments
Post a Comment