சேதம்

வேலூர்   31-8-22

குடியாத்தத்தில் 7 அடி விநாயகர் சிலையை திருடமுயற்சி செய்த இளைஞர்கள்- விநாயகர் சிலை சேதம்- சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை.



வேலூர் மாவட்டம்இன்றுவிநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதனிடையே குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள்  வைக்கப்பட்டுள்ள நிலையில்குடியாத்தம் அரசு  மருத்துவமனை அருகே அண்ணா தெரு பகுதியை சேர்ந்த பொது மக்கள் மற்றும் இந்து அமைப்பினர் சேர்ந்து 7 அடி விநாயகர் சிலையை வைத்துள்ளனர்.இதனிடையே அதிகாலையில் பார்த்த போது சிலை வைத்த இடத்திலிருந்து சுமார் 10 அடி தொலைவில் சிலையில் கை மற்றும் தும்பிக்கை சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இருந்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த பகுதி மக்கள்  குடியாத்தம் நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆராய்ந்த பொழுது அதில்  மூன்று இளைஞர்கள் விநாயகர் சிலையை திருடி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது தெரியவந்தது.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து குடியாத்தம் போலீசார்  மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்