கைது
வாழை தோட்டத்தில் கஞ்சா
பயிரிட்டவர் கைது
குடியாத்தம்–
குடியாத்தம் அருகே, வாழை தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டவரை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே ஏர்த்தாங்கல் கலர்பாளையம் பெரும்பாடி ஏரிக்கரையோரம் உள்ள நிலத்தில் கஞ்சா பயிர் செய்வதாக வேலுார் மாவட்ட எஸ்.பி., ராஜேஸ் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குடியாத்தம் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அதில் பெரும்பாடியை சேர்ந்த விவசாயி கக்கன், 65, என்பவர் வாழை தோட்டத்தில் 40 கஞ்சா செடிகள் பயிர் செய்தது தெரியவந்தது. போலீசார் கக்கனை கைது செய்து கஞ்சா செடிகளை அழித்தனர்.
Comments
Post a Comment