வெள்ளம்
பாலாற்றில் வெள்ளம்
வேலுார்
வேலுார் பாலாற்றில் வெள்ளம் வந்ததால், நீரில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக திருப்பத்துார், வேலுார் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி, ஆம்பூர் பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்தது. இந்நிலையில் ஆந்திரா மாநிலம், சித்துாரில் பெய்து வரும் கன மழையால் குடியாத்தம் அருகே மோர்த்தானா அணை நிறம்பி உபரிநீர் வெளியேறுவதால் கவுண்டன்யா ஆற்றுக்கு வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் வெள்ளக்கல் கானாறு, ஆமைமடுகு, கண்டிப்போப்பு என 20 க்கும் மேற்பட்ட கானாறுகள் நிரம்பி அதிலிருந்து உபரிநீர் பாலாற்றுக்கு வந்து கொண்டுள்ளது. இதனால் வேலுார் காட்பாடி சாலை பாலாற்றில் இன்று மாலை முதல் வெள்ள நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் வேலுார் மக்கள் பாலாற்றில் இறங்கி குளித்து வருகின்றனர். இது குறித்து வேலுார் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ராமமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில், பாலாற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், ஆற்றில் இறங்க வேண்டாம், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கூறியுள்ளார்.
Comments
Post a Comment