ஆர்பாட்டம்
வேலூர்
வேலூரில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்பாட்டம்
__________________________________
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் வாழ்வாதார உரிமையும் வரையறுக்கப்பட்ட ஊதியமும் கேட்டு மாவட்டத்தலைவர் வில்வநாதன் தலைமையில் ஆர்பாட்டமானது நடைபெற்றது இதனை மாநில செயலாளர் சுமதி துவங்கி வைத்தார் இதில் மாவட்ட செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடை ஐந்து லட்சம் வழங்க வேண்டும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உதவியாளர்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ,9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டமானது நடைபெற்றது பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களின் மூலமே அமுல்படுத்த வேண்டும் தனியார் குழுக்களுக்கு வழங்க கூடாது ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது இதில் திரளான ஊழியர்கள் கலந்துகொண்டனர்
Comments
Post a Comment