பலி
வேலை தேடி சென்ற வாலிபர் ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்பு
ஜோலார்பேட்டை
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அருகே கன்னட அல்லி கிராமத்தை சேர்ந்தவர் விமல்(38).இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னைக்கு வேலை தேடி செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றார். இந்நிலையில் நேற்று ஜோலார்பேட்டை அருகே பார்சம்பேட்டை ரயில்வே மேம்பாலம் அருகில் சென்னை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு அவர் இறந்தார். பின்னர் தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் அன்று சென்று ரயிலில் அடிபட்டு இறந்த விமலின் உடலை மீட்டு திருப்பத்துார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விமல் வேலை கிடைக்காத விரட்டியில் ரயில் முன் பாய்ந்த தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment