ஆந்தை மீட்பு
அரிய வகை ஆந்தை மீட்பு
திருப்பத்துார்,செப்
திருப்பத்துார் காமாட்சியம்மன் கோயில் தெருவில், அரிய வகை ஆந்தை ஒன்று பறக்க முடியாமல் கிடப்பதாக வந்த தகவலின் பேரில், திருப்பத்துார் வன சரக அலுவலர் பிரபு மற்றும் வன குழுவினர் அங்கு சென்று பறக்க முடியாமல் தவித்த அரிய வகை ஆந்தையை மீட்டு மாம்பாக்கம் காப்பு காட்டில் விட்டனர்.
மீட்கப்பட்ட அரிய வகை ஆந்தை, தமிழகத்தில் அடர்ந்த வனப்பகுதியில் வாழக்கூடியது.மேலும் ஆந்தைக்கு பகலில் பார்வை திறன் இல்லாத காரணத்தினால். பறக்க முடியாமல் ஒரே இடத்தில் தவித்தது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், அரிய வகை ஆந்தை மீட்டு காப்பு காட்டில் விடப்பட்டது. அது தன் இருப்பிடம் நோக்கி சென்றுவிடுமென வனத்துறையினர் தெரிவித்தனர்.
Comments
Post a Comment