கத்திகுத்து
வாலாஜாவில் சகோதரியின் கணவனை கத்தியால் வெட்டிய மைத்துனர் தலைமறைவு போலீஸார் வலைவீச்சு
இராணிப்பேட்டை, செப்
வாலாஜாவில் கணவன் மனைவி தகாராறு காரணமாக அக்கா கணவரை கத்தியால் வெட்டிதலைமறைவான மைத்துனரை போலீஸார் தேடிவருகின்றனர்..
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா கச்சாலத்தெருவைச் சேர்ந்த அசோகன்32,ஜேசிபி ஆப்ரேட்டராக பணியாற்றி வரும் இவருக்கும் அதே தெருவைச்சேர்ந்த விஜயலஷ்மிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமாணமாக கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் மனம் வெறுத்து அசோகன் தன்னுடன் வாழ வருமாறு அடிக்கடி விஜயலஷ்மியிடம் வற்புறுத்தியதாகவும் அதற்கு அவர் சேர்ந்து வாழ மறுத்து வந்ததாகவும் இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது . இந்நிலையில் நேற்று மாலை அசோகன் விஜயலஷ்மியிடம் சென்று அழைத்ததில் இருவருக்குமிடையே வழக்கம்போல தகராறு ஏற்பட்டபோது அருகிலிருந்த விஜயலஷ்மியின் தம்பி விஜயகுமார்( எ) மணி(22) ஆத்திரத்தில் கத்தியால் அசோகனைத் கத்தியால் வெட்டி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டதாக்க் கூறப்படுகிறது . தாக்குதலில் பலத்த காயமாடைந்த அசோகனை அருகிலிருந்தவர்கள் உடனை வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர் . இதற்கிடையே தகவலறிந்த வாலாஜாப் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அசோகனை கத்தியால் வெட்டிய மணி(எ)விஜய குமாரைப் போலீஸார. தேடிவருகின்றனர் . மேலும் சொந்த அக்கா கணவரை மைத்துனரே கத்தியால் வெட்டி தாக்கிசம்பவம் வாலாஜா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Comments
Post a Comment